நடுநிலையான விசாரணைக்கு தயார்!
பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
இஸ்லாமாபாத், ஏப்.26- ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்த “நடுநிலையான விசாரணைக்கு தயார்” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். மோசமான பயங்கர வாத தாக்குதலில் பாகிஸ் தான் அரசுக்கு தொடர்பு இருப் பதாகவும், பயங்கரவாதி களுக்கு அந்நாடு அடைக்க லம் கொடுப்பதாகவும் குற் றச்சாட்டு எழுந்துள்ள நிலை யில், கைபர் - பக்துன்வா மாகாணத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த பட்ட மளிப்பு விழாவில், ஷெபாஸ் ஷெரீப் பேசியுள்ளார். “பஹல்காமில் நடந்த சோகம், இந்தியாவால் நம் மீது சுமத்தி விளையாடப் படும் நிரந்தரப் பழிக்கு மற் றாரு உதாரணம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளிக்கு வர வேண்டும். அந்த வகையில், ஒரு பொறுப்புள்ள நாடாக- பாகிஸ்தான் எந்த நடுநிலை யான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைக் கும் தயாராக உள்ளது” என்று ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.