வலுக்கட்டாய கடன் வசூலுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை!
தமிழக சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்
சென்னை, ஏப்.26- தமிழ்நாட்டில் குறு நிதி நிறுவ னங்கள், பணக் கடன் வழங்கும் முக மைகள் மற்றும் பணக்கடன் வழங்கும் அமைப்புகள், வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்வதைத் தடுக்க புதிய சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தனி நபர்கள், தனி நபர்கள் குழு, சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட வற்றுக்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள, பணக் கடன்கள் வழங் கும் நிறுவனங்களின், வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக் கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளா கின்றனர். எனவே, இதனைத் தடுக்கும் வகையில், 2025-ஆம் ஆண்டு தமிழ் நாடு பணக் கடன் வழங்கும் நிறு வனங்கள் (வலுக்கட்டாய நடவடிக்கை களைத் தடுத்தல்) சட்ட முன்வடிவை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை (ஏப்.26) அன்று அறி முகம் செய்தார். இந்த புதிய சட்டத்திருத்த மசோதா வில், “கடனை வலுக்கட்டாயமாக வசூ லித்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்; பிணையில் வெளிவர முடியாது” என்று கூறப் பட்டுள்ளது.
தற்கொலை தூண்டியதாக வழக்கு பதியப்படும் “
வலுக்கட்டாய கடன் வசூலால், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடனை வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. “கடன் பெற்றோரையோ, அவரது குடும்பத்தினரையோ நிறுவனங்கள் மிரட்டவோ, பின் தொடரவோ, அவர் களது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவோ கூடாது” என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. “கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்க லாம்” என்றும் இந்த சட்டமசோதா வில் கூறப்பட்டுள்ளது.
முறையற்ற வழிகளை நாட முடியாது
இந்த புதிய சட்டத் திருத்த மசோதா வின் மூலம், கடன் வழங்கும் நிறு வனங்கள் அதனை வசூலிக்க முறை யற்ற வழியை நாடுவதை முழுமை யாக தடுக்க முடியும். இச்சட்டமுன்வடி வின் படி தண்டனைக்குரிய குற்றங்க ளில் கைது செய்யப்பட்டவர், பிணை யில் வெளிவர முடியாது. வலுக்கட்டாயமான முறையில் கடன் வசூலிப்பதால் மிகுந்த இன் னல்களை அனுபவித்து வரும் பொரு ளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த குழுக்கள் மற்றும் தனி நபர்கள், குறிப்பாக விவசாயிகள், மக ளிர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக் களை விடுவிப்பதற்காகவும் பாது காப்பதற்காகவும் இந்த சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் தெரிவித்தார்.
அறிமுக நிலையிலேயே கட்சிகள் வரவேற்பு
இந்நிலையில், மசோதாவை அறி முக நிலையிலேயே அனைத்து கட்சி களும் வரவேற்றன. மேலும், இந்த மசோ தாவில் சில திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளது என்றும் இதனால் சட்ட மசோதாவை நிறைவேற்று வதற்கு முன்பு விவாதம் செய்ய அனு மதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி மற்றும் திமுக தோழமைக் கட்சி களும் விடுத்த கோரிக்கையை பேர வைத் தலைவர் மு. அப்பாவு ஏற்றுக் கொண்டார். இந்த சட்ட மசோதா இந்த கூட்டத் தொடரின் இறுதி நாளான ஏப்ரல் 29 அன்று சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அனுமதி கொடுத்ததும் சட்டத்திருத் தங்கள் அமலுக்கு வரும் என்று தெரி விக்கப்பட்டு உள்ளது.