tamilnadu

img

51 பெருமுதலாளிகள் வெளிநாட்டுக்கு ஓட்டம்....மக்கள் பணம் ரூ.17 ஆயிரம் கோடி ஸ்வாஹா

புதுதில்லி:
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதனைத் திருப்பிச்செலுத்தாமல் மொத்தம் 51 முதலாளிகள் நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாக மத்திய அரசு புள்ளிவிவரம் அளித்துள்ளது.இவர்கள், மொத்தம் 17 ஆயிரத்து 947 கோடியே 11 லட்சம் ரூபாயை மோசடிசெய்திருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள்’ குறித்த கேள்விக்கு, மத்திய நிதியமைச்சர் அனுராக் சிங் தாக்குர், செவ்வாயன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள் ளார். அதில்தான் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

“நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் இருந்து கடன் பெற்று அதைத் திரும்ப செலுத்தாமல் 51 பேர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள்,ஏற்கெனவே 66 வழக்குகளில் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த 66 வழக்குகளில் சம் பந்தப்பட்ட குற்றவாளிகள் மொத்தம் 17 ஆயிரத்து 947 கோடியே 11 லட்சம் ரூபாய்அளவுக்கு மோசடி செய்துள்ளனர். இவ்வாறு சட்ட விரோதமாக தப்பியோடியதாக கூறப்படுவோர் மீது, பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018-இன்
கீழ் 10 தனி நபர்கள் மீது அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளது. இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை திரும்ப அழைத்துவருவதற்கான ஒப்படைப்பு கோரிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரிகள் வாரியம் (CBIC) இரண்டு கோரிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு ஜூலை மாதம் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று 8 பேரை நாடு கடத்துவதற்கான உத்தரவை இண்டர் போல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

\பணப் பரிமாற்ற மோசடி தடுப்புசட்டம் நடைமுறைக்கு வந்து இதுவரை 14 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக்காலத்தில் மொத்தம் 694 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 13 பேர்இதுவரை தண்டனை பெற்றுள்ளனர். பொருளாதார குற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு சென்றுள்ளனர். இவ்வாறு அனுராக் சிங் தாக்குர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மறைமுக வரிகள் வாரியம், சுங்கத் துறை, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புக்களின் தரவுகள் அடிப்படையில், இந்த அறிக்கையை அனுராக் சிங் தாக்குர் தாக்கல் செய் துள்ளார்.