வாஷிங்டன்
ஆப்கானிஸ்தான் நாடு தலிபான் பயங்கரவாதிகள் கையில் சிக்கியுள்ளது. தற்போதைய நிலையில் அங்கு பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பெண்கல்வி, மக்கள் பாதுகாப்பு, இயல்பு நிலை போன்றவற்றிற்கு பாதுகாப்பு இல்லா சூழல் விரைவில் உருவாகும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்கு இதுவரை வழங்கி வந்த நிதியை நிறுத்திக் கொள்வதாக உலக வங்கி அதிரடி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தலிபான்களால் ஆப்கன் பெண்களின் நிலை படுமோசமாகும் என உலக வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கி அமெரிக்காவில் சில சொத்துக்களை வைத்துள்ளது. இந்த சொத்துக்களை தலிபான்கள் கைப்பற்றி கஜானாவை நிரப்ப திட்டம் தீட்டினர். இதனை முன்கூட்டியே உணர்ந்த அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தான் மத்திய வங்கி அமெரிக்க சொத்துக்கள் தலிபான்கள் கையில் கிடைக்க வாய்ப்பில்லை என வெள்ளை மாளிகை அதிரடியாக கூறியுள்ளது. அடுத்தடுத்து நிதி தொடர்பான வசதிகள் கைவிட்டு போவதால் தலிபான்களின் புதிய அரசாங்கம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.