tamilnadu

img

கிரண்பேடியை கண்டித்து இன்று முதல் தொடர் போராட்டம்....

சென்னை:
புதுச்சேரியில் மக்கள் நலத் திட்டங்களை தடுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு வெள்ளிக்கிழமை (ஜன.8) முதல் தொடர் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், புதிய நீதிக்கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதுவை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஆளுநர் மாளிகை, சட்டமன்ற வளாகம், தலைமை செயலகம், ஜிப்மர், அரசு மருத்துவமனை பகுதியை சுற்றியுள்ள 500 மீட்டர் தூரத்தில் கூட்டம் கூடாது. அனுமதியின்றி ஊர்வலம், போராட் டம் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த ஆட்சியர் அனுமதி மறுக் கப்பட்டது. அதற்கு பதிலாக ஆம்பூர் சாலையில் போராட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அனுமதி கோரினார். அந்த இடம் அரசு மருத்துவமனைக்கு அருகில் இருப்பதால் அங்கும் போராட்டம் நடத்தக் கூடாது என காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இந்த நிலையில் காவல்துறை தரப்பில் அண்ணாசிலை அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கும், அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்றும், கொரோனா கட்டுப்பாடுகளை கடை பிடித்து போராட்டம் நடத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.இதற்கிடையில் கேரளா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து 350 பேர் கொண்ட 3 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் புதுவைக்கு வந்துள்ளனர்.

மத்திய பாதுகாப்பு படையினர் ஆளுநர் மாளிகை, சட்டப் பேரவை வளாகம், தலைமை செயலகம், முதலமைச்சர் நாராயணசாமியின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய பாதுகாப்பு படைக்கு உறுதுணையாக புதுவை காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆளுநர் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்கா பூட்டப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை, சட்டப் பேரவை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புக் கட்டைகள், பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆளுநர் மாளிகை அருகில் தடையை மீறி போராட்டம் நடத்தினால் பேரிடர் தடுப்பு சட்டத் தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர், டி.ஜி.பி., ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திட்டமிட்டபடி போராட்டம் அறவழியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், முதலமைச்சர் நாராயணசாமியை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும் என பாஜக தரப்பில் போட்டி போராட்டம் அறிவிக்கப்பட்டுள் ளது. இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை.