பெரம்பலூர், ஆக.25- அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சிஐடியு சங்கத்தின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட 3-வது மாநாடு பெரம்பலூரில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.சக்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் எ.தமிழரசி வரவேற்றார். திருமானூர் ஒன்றிய துணைத்தலைவர் வி.வள்ளியம்மை அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றினார். மாநில துணைச் செயலாளர் ஆர்.ரத்தினமாலா துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.மணிமேகலை வேலை அறிக்கையும், பொருளாளர் எ.சுமதி வரவு- செலவு அறிக்கையும் அளித்தனர். மாநில பொருளாளர் எம்.பாக்கியம், சிஐடியு நிர்வாகிகள் அழகர்சாமி, பி.துரைசாமி, எஸ்.அகஸ்டின், மாதர் சங்கம் எ.கலையரசி, ஆட்டோ ஊழியர் சங்கம் எ.ரெங்கநாதன், சி.சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் துணைத் தலைவர் கே.மேனகா, மாநில துணைச் செயலாளர் ஆர்.முத்துசெல்வி ஆகியோர் தீர்மானக்குழு விளக்கவுரை ஆற்றினர். மாநில பொதுச்செயலாளர் டி.டெய்சி நிறைவுரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகிகள் சுடர்மதி, தனம், லலிதா, ஜெயந்தி, நிர்மலா, தனலட்சுமி, முத்துலட்சுமி, ராணி, மல்லிகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் ஒன்றிய தலைவர் தலைவர் கே.விஜயலட்சுமி நன்றி கூறினார். மாநாட்டில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். முழு நேர அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் வழங்கி பணிக்கொடை மொத்தமாக பணியாளர்களுக்கு ரூ.5 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.