tamilnadu

img

குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 வழங்க அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஆக,26- திருச்சி மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க திருவெறும்பூர் வட்டார மாநாடு ஆயில்மில் காமராஜர் நகர் அங்கன்வாடி மையத்தில் திங்களன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் ராணி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பாக்கியம் துவக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் தேவமணி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பச்சையம்மாள், மாவட்ட தலைவர் செல்வி, செயலாளர் சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 வழங்க வேண்டும். கடைசி மாத ஊதியத்தில் பாதியை பென்சனாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் டெய்சி நிறைவுரையாற்றினார். முன்னதாக ஒன்றிய செயலாளர் மாரியம்மாள் வரவேற்றார். பிரேமா நன்றி கூறினார்.