tamilnadu

img

தொற்று பாதித்த ஊழியர்களுக்கு முறையான சிகிச்சை வேண்டும் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை

சென்னை, ஜூலை 12 - மருத்துவ முகாம்கள் நடப்பதால், அங்கன்வாடி மையத்தை தினசரி சுத்தப்ப டுத்த பினாயில், டெட்டால் போன்றவை வாங்க நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு  அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அங்கன்வாடி மையங்களை தனியார்மய மாக 2012ம் ஆண்டு ஜூலை 10ந் தேதி நாடாளு மன்றம் ஒப்புதல் வழங்கியது. இதனை எதிர்த்து ஆண்டுதோறும் ஜூலை 10ஆம் நாளை அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு  தினமாக அனுசரிக்கின்றனர். இதனை யொட்டி தமிழகம் முழுவதும் ஜூலை 10ந் தேதி போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஊழியர்கள் கருப்பு அட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பேசிய சங்கத் தலைவர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக வழங்கவில்லை.

இதனால் பல ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா மருத்துவ முகாம் நடத்த  தினசரி மையத்தை சுத்தப்படுத்த வேண்டி உள்ளது. அங்கன்வாடி மையத்திற்கு அரிசி,  பருப்பு ஒருநாள், சத்துமாவு மற்றொரு நாள்,  முட்டை மாதத்திற்கு 2 நாட்கள் என 4 நாட்கள் என அனுப்பி வைக்கப்படுகிறது. இவற்றை ஒன்று சேர்த்து நேரடியாக கொண்டு சென்று  ஊழியர்கள் குழந்தைகளின் வீடுகளில் கொடுக்கின்றனர். இதன்படி மாதம் 5 நாட்கள்  பணிபுரிகின்றனர் என்றனர். இத்தகைய கடினமான சூழலில் பணி யாற்றும் ஊழியர்களில் தொற்று பாதிக்கப் பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், அங்கன்வாடி மையத்தை சுத்தப்ப டுத்த பினாயில், டெட்டால் போன்றவை வாங்க  மாதம் 300 ரூபாயும், பயணப் படியாக 200 ரூபாயும் வழங்க வேண்டும், தேக்கநிலை ஊதி யம், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும்  அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தையொட்டி சங்கத் தின் சென்னை மாவட்டம் சார்பில், மாவட்ட  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. மாநில மையத்தின் சார்பில் பிரதமர், முதல மைச்சர், துணை முதலமைச்சர், அரசு செய லாளர், இயக்குனர் ஆகியோருக்கும், மாவட்டங்கள் சார்பில், திட்ட அலுவலரி டத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.