திருவாரூர்: திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 3 ஆவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.சாந்தி தலைமை வகித்தார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலச் செயலாளர் ஆர்.மோகன், மாவட்டத் தலைவர் டி.முருகையன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, மாநில துணைத் தலைவர் எஸ்.தேவமணி, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம்.சௌந்தரராஜன், வைத்தியநாதன், எம்.கே.என்.அனிபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அத்துடன் குறைந்த பட்சம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு மேற்பார்வையாளர்களாகவும், 5 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளர்களுக்கு பணியாளராகவும் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகளாக ஏ.பிரேமா தலைவராக வும், வி.தவமணி செயலராகவும், ஆர்.மாலதி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.