பழனி:
ஆசிரியர் தேவைக்கேற்ப “டெட்”தேர்வை நடத்தவேண்டுமென ஆயக்குடிமரத்தடி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.ஆயக்குடி மரத்தடி மையத்தின் தலைவர் இராமமூர்த்தி வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த2012-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவருகிறது. “டெட்” தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு இதுவரை ஐந்து முறை “டெட்”தேர்வு நடத்தப்பட்டுள்ளது. 2012-ஆம்ஆண்டில் முதன்முதலில் நடத்தப்பட்ட தேர்வில் 2,400 பேர் மட்டுமே வெற்றிபெற்றதால் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு ஏராளமானோர் அரசுப் பணிபெற்றனர். பிறகு 2013, 2014, 2015, 2019 ஆண்டுகளில் மாற்றுதிறனாளிகளுக்கு தனிதேர்வு ஐந்து முறை தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் “டெட்” தேர்வில் 150-க்கு 90 மதிப்பெண்கள் பெற்றவர்கள் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பிறகு வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது. “டெட்” தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 82-ஆக குறைக்கப் பட்டது. இதன் மூலம் 2012, 2013-ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றவர்கள் அரசுப் பணிக்கு ஆசிரியர்களாக சென்று விட்டனர். அதன்பிறகு நடத்தப்பட்ட “டெட்” தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்களை கையில் வைத்துள்ளனர். தற்போது கல்வி துறை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
குறைந்தது 80 ஆயிரம் பேர்மீண்டும் தேர்வு எழுதவேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. D.ted, B.Ed படித்தவர்கள் ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படிக்கின்றனர். ஆனால் “டெட்” தேர்வு குறித்த குழப்பம் இன்னும் மாணவர்களுக்கு தீரவில்லை. மற்ற போட்டித் தேர்வுகள் போல ஆசிரியர் காலியிடங்களுக்கு ஏற்ப “டெட்” தேர்வை அரசு நடத்த வேண்டும். ஏற்கனவே “டெட்” தேர்வில் வெற்றிபெற்றவர்களின் நிலை கேள்விக் குறியாக உள்ளது. ஒவ்வொரு முறையும் “டெட்” தேர்வினை ஆறு லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வுக் கட்டணமாக ரூ.500 வீதம் 30 கோடி வசூலிக்கபடுகிறது.. வெற்றி பெற்றவர்களுக்கு முறையாக சான்றிதழ் வழங்குவதில்லை. வரும்காலத்தில் பள்ளிகளில் உள்ள காலியிடங்களுக்கு ஏற்ப “டெட்” தேர்வை நடத்த வேண்டும்.