புவனேஸ்வர்:
ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில், நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி, தொடர்ந்து 5-ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சி தேர்தல் நடைப்பெற்ற 146 தொகுதிகளில் 113 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
1997-ம் ஆண்டு ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி, பிஜூ ஜனதா தளம் என்ற புதியகட்சியை உருவாக்கியவர் நவீன் பட்நாயக்.அதுமட்டுமன்றி, அடுத்த சில ஆண்டுகளிலேயே- அதாவது, 2000-வது ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலேயே, அபார வெற்றிபெற்று முதல்வர் ஆனவர். அப்போது முதல் தொடர்ந்து வெற்றிபெற்று, கடந்த 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்துவரும் நவீன் பட் நாயக், தற்போது மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளார்.
ஒடிசாவில் மொத்தம் 147 தொகுதிகள் இருக்கின்றன. இதில், தேர்தல் நடைபெற்ற 146 தொகுதிகளில் 113 தொகுதிகளில் பிஜூ ஜனதாதளம் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியை கைப்பற்றியுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஓரிடத்தில் வென்றுள்ளார்.
மக்களவைத் தொகுதிகளைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 21 தொகுதிகளில் பிஜூ ஜனதாதளம் 13 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.