tamilnadu

img

பாஜகவின் அரசியல் தில்லுமுல்லு இந்திய ஜனநாயகத்தில் கருப்புப்புள்ளி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை, நவ.23-  மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக அரசியல் தில்லுமுல்லு செய்து, முதலமைச்சராக பதவியேற்றுள்ள விதம் இந்திய ஜன நாயகத்தில் கருப்புப்புள்ளி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிராவில் முதலமைச்சரும், துணை முதலமைச்ச ரும் பதவியேற்றுள்ள முறை, பாரதிய ஜனதா கட்சி அதி காரத்தை கைப்பற்றுவதற்கு மிக கீழ்த்தரமான, நெறியற்ற நட வடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக் கூடிய கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

பாரபட்சமற்று இயங்க வேண்டிய குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரை தன்னுடைய அதிகார வெறிக்காக பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும், சட்டவிதிகளையும் காலில் போட்டு மிதித்து பாஜக செயல்பட்டுள்ளது. மிக கேவலமாக பாரதிய ஜனதா கட்சி திரைமறைவு, தில்லுமுல்லுகளை மகாராஷ்டிரா அரசியலில் அரங்கேற்றியுள்ளது. ஏற்கனவே, கோவா, கர்நாடகா மற்றும் பல வடகிழக்கு மாநி லங்களில் செய்த ஜனநாயகப் படுகொலையை மகாராஷ்டிரா விலும் பாஜக நிகழ்த்தியுள்ளது. இந்திய ஜனநாயகத்தில் கருப்புப் புள்ளியாக பாஜக நிகழ்த்தியுள்ள இந்த சட்டவிரோத மான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. பாஜகவின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கினை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டன குர லெழுப்பிட வேண்டுமென மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.