திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
புதுச்சேரி,டிச.2- தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமியா? முதலமைச்சர் எடப்பாடியா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்விக் கனைகளை தொடுத்தார். திமுக தலைவர் ஸ்டாலின் கட லூர் செல்லும் வழியில் புதுச்சேரி யில் திங்களன்று (டிச-2)செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டாக ஆளும் கட்சி தோல்வி பயத்தில் உள்ளதால் உள் ளாட்சித் தேர்தலை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காலம் கடத்தி வந்தது. உச்சநீதிமன்றம் அறி வுறுத்தலைத்தொடர்ந்து வேறு வழியின்றி வேண்டுமேன்றே திட்ட மிட்டு, யாராவது நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அதி முக அரசும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள மாநில தேர்தல் ஆணையமும் ஒன்று சேர்ந்து அவசர கதியாக உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளனர்.
திமுக மட்டுமின்றி, பல்வேறு கட்சிகளும், பொது நல அமைப்பு களைச் சேர்ந்தவர்களும் உள் ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று நீதி மன்றம் சென்றுள்ளனர். ஆனா லும் மறுவரையறை முறையாக செய்யப்படவில்லை. எஸ்சி, எஸ்டி, பெண்கள் ஒதுக்கீடு வரை யரை முழுமையாக செய்ய வில்லை. இதை முறைப்படுத் தவே திமுக நீதிமன்றம் சென்றதே தவிர, தேர்தலை நிறுத்த வேண் டும் என்று செல்லவில்லை. ஆனால் வேண்டும் என்றே முதல் வர் முதல், கடைகோடி அமைச்சர் வரை உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்த திமுக திட்டமிடுவ தாக உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மாவட்டங்கள் பிரிக்கப் பட்டுள்ளது, அதனுடைய வரை யறையும் கேட்டுள்ளோம். அதற்கும் அரசு தரப்பில் இருந் தும், தேர்தல் ஆணையத்தில் இருந்தும் எந்த பதிலும் வர வில்லை. நாங்கள் பல முறை தேர்தல் ஆணையத்தை சந்தித்து பல்வேறு மனுக்களை தந்துள் ளோம். முறையாக பதில் வராத தால்தான் தற்போது நீதிமன்றம் சென்றுள்ளோம். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலாக இருந்தா லும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் ஒரே கட்டமாகத் தான் நடந்துள்ளது.
அதுபோல் உள்ளாட்சித் தேர்தலும் அனைத்து கால கட்டத்திலும் ஒரே கட்டமாகத்தான் நடந்துள்ளது. ஆனால் இன் றைய அறிவிப்பில் ஊரகப்பகுதி களுக்கு மட்டும் தேர்தல் நடத்தி, அடுத்து பல கட்டங்களாக தேர் தல் நடத்தப்போவதாக வெளி யிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. இதனால் தமிழக தேர் தல் ஆணையர் பழனிசாமியா? எடப்பாடி பழனிசாமியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களு டன் கலந்து ஆலோசித்து வரு கின்றோம். அதில் முடித்த பின்னர் மூத்த வழக்கறிஞர்களுடன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எப்படி அணுகுவது என பேசி முடிவு எடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான வழக்கின் மீதான விசாரணை வரும் 5 ஆம் தேதி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வர உள்ளது. தமி ழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துவதற்கான நட வடிக்கையை திமுக தொடர்ந்து எடுக்கும். இவ்வாறு ஸ்டாலின் கூறி னார்.