ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய நகரான பரமக்குடி அருகே உள்ள தண்ட்ரா தேவிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். அந்த பகுதி ரவுடியாக வலம் வரும் இவர் வழிப்பறி வழக்கில் சிறைக்கு சென்று சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
வியாழனன்று மாலை தனது நண்பர்களுடன் மது அருந்து சென்ற கார்த்திக் வெள்ளியன்று காலை அதே இடத்தில் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவ்வழியே சென்ற ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மது அருந்திய இடத்தில் நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு தடய நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.