districts

தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை மனைவியை கட்டிப் போட்டு 175 சவரன் நகை கொள்ளை

அறந்தாங்கி, ஏப்.25 - புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது  நிஜாம்(52). இவர் ஆப்டிக்கல் கடை உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆயிஷாபீவி. இருவருக்கும் ராஜாமுகமது, சேக்அப்துல் காதர், பர்கானா ஆகிய மூன்று  பிள்ளைகள் உள்ளனர்.  மகள் பர்கானாவிற்கு திரு மணமான நிலையில், மகன்கள் இருவரும் வெளி யூரில் உள்ள ஆப்டிக்கல் கடையை நிர்வகித்து வந்துள் ளனர். கணவன்-மனைவி  இருவர் மட்டும் ஆவுடையார் பட்டினத்தில் வாழ்ந்து வந்துள்ளனர்.  இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணியள வில் வீட்டின் எதிர்புறம் உள்ள  பள்ளிவாசலில் தொழு கையை முடித்துவிட்டு, வீட்டின் முன்பக்க வராண்டா வில் உட்கார்ந்து முகமது நிஜாம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப் போது வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து வந்த 3 பேர், முகமதுநிஜாமின் கழுத்தை கரகரவென அறுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார். அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் மனைவி ஆயிஷா பீவியின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, பீரோ  சாவியை தரும்படி கேட்டுள் ளனர். அவர் தர மறுக்கவே ரத்தக் கரையுடன் உள்ள  கத்தியை காட்டி மிரட்டியுள்ள னர்.

இதில் உயிருக்கு பயந்த ஆயிஷாபீவி பீரோ சாவியை அவர்களிடம் கொடுத்துள்ளார். உடனே சாவியை வாங்கிய மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 175 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.  அதனை தொடர்ந்து கை, கால்கள் கட்டப்பட்டிருந்த ஆயிஷா பீவி, மெல்ல மெல்ல நகர்ந்து சென்று செல் போனை எடுத்து உறவினர் களுக்கு தகவல் தெரி வித்துள்ளார். தகவலை யடுத்து வந்து பார்த்த உற வினர்கள், முகமது நிஜாம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மணமேல்குடி காவல்  நிலையத்திற்கு தகவல் தெரி வித்துவிட்டு, வீட்டிற்குள் கட்டப்பட்டுக் கிடந்த ஆயி ஷாபீவியை காப்பாற்றினர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  மாவட்ட காவல் கண்காணிப் பாளர் நிஷாபார்த்தீபன், சம்பவம் குறித்து ஆய்வு  மேற்கொண்டார். இது குறித்து வழக்கு பதிந்து, தொழிலதிபர் நகை-பணத் திற்காக கொலை செய்யப் பட்டாரா அல்லது வேறு ஏதே னும் முன்விரோத கார ணங்கள் உள்ளதா என விசா ரணை நடத்தி வருகின்றனர்.