districts

நெல்லைக்கு கடத்தி வந்து கொலை பாஜக நிர்வாகியின் நண்பரிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை

திருநெல்வேலி, பிப்.20- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது35). பா.ஜனதா நிர்வாகியான  இவர் டிராவல்ஸ் நடத்தி வந்தார்.  கடந்த 16-ந்தேதி இவர் நெல்லை அருகே முன்னீர் பள்ளம்,  கண்டித்தான்குளம் பகுதியில் உள்ள வெள்ளநீர் கால்வா யில் கல்லை கட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக  மீட்கப்பட்டார்.போலீசார் நடத்திய விசாரணையில் ஈரோட்டில்  இருந்து நெல்லைக்கு சவாரி செல்ல வேண்டும் என்று கூறி  செந்தில்குமாரை 3 பேர் கும்பல் அழைத்து வந்ததும், அந்த  கும்பல் அவரை கொலை செய்ததும் தெரியவந்தது.சம்பவத் தன்று செந்தில்குமாருடன் அவரது நண்பர் சீனிவாசன் என்பவ ரும் காரில் வந்ததும், கும்பல் அவரை மிரட்டி கயத்தாறு அருகே இறக்கி விட்டதும் போலீசார் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து செந்தில் குமாரை கொன்ற கும்பல் குறித்து சீனிவாசனிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. செந்தில்குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அதற்கான காரணம் என்ன என பல்வேறு கேள்விகளை போலீசார் சீனிவாசனிடம் கேட்டனர். ஆனால் சீனிவாசன் முன்னுக்குப்பின் முரணாக பதில்  அளித்ததாக கூறப்படுகிறது. முதலில் தூத்துக்குடி மாவட்டம்  கயத்தாறு அருகே வரும் போது அந்த கும்பல் தன்னை காரில் இருந்து இறக்கி விட்டு விட்டு செந்தில் குமாரை கடத்தி  சென்றது என அவர் கூறினார்.

சிறிது நேரம் கழித்து கேட்ட போது ஈரோடு பகுதியி லேயே அவரை கொலை செய்து விட்டனர். அங்கிருந்து நெல்லைக்கு கொண்டு வந்து வீசி விட்டு அந்த கும்பல்  சென்றது. மேலும் அந்த கும்பல் யார்? என எனக்கு தெரி யாது எனவும், தான் மயக்க நிலையில் இருந்ததாகவும் அவர்  தெரிவித்தார்.  இதையடுத்து போலீசார் அவரிடம் ஞாயிற்றுக்கிழமை 2-வது  நாளாக துருவி துருவி விசாரணை நடத்தினர். கொலை கும்பல் ஈரோட்டில் ஒரு விடுதியில் தங்கி இருந்த தாகவும், அங்கு சென்று தான் செந்தில்குமார் மற்றும் சீனிவா சன் ஆகியோர் சவாரிக்காக கும்பலை காரில் அழைத்து சென்ற தாக சீனிவாசன் தெரிவித்து இருந்தார்.ஆனால் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் செந்தில்குமார் மட்டுமே சென்று அழைத்து வந்த பதிவு உள்ளது. மேலும் ஈரோட்டில் வைத்தே  செந்தில்குமாரை கொலை செய்து இருந்தால் இவ்வளவு தூரத்திற்கு செக்போஸ்ட்கள் மற்றும் போலீஸ் சோதனை களை தாண்டி நெல்லைக்கு கொண்டு வந்திருக்க முடியாது எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் செந்தில் குமார் வேறு சில இளம்பெண்களுடனும் பேசி வந்ததா கவும், இது தொடர்பாக அவருக்கு சிலருடன் முன் விரோதம்  இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறாக செந்தில் குமார் கொலையில் பல்வேறு மர்மங்கள் நீடித்த வண்ணம்  உள்ளன.எனவே இதற்கு விடை காணும் வகையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.செந்தில் குமாரின் செல்போனுக்கு வந்த அழைப்பு களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் மூலம் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்று போலீஸ் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.