சென்னை, ஏப்.1- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கார ணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள் ளது. இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரிசி பெறும் 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், ஏப்ரல் மாதத்துக்கான பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரு கிறது. நாளொன்றுக்கு சுமார் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முடிவு செய் யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர் களுக்கு வீடு வாரியாக டோக்கன் வழங்கப் படும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று சிறப்பு தொகுப்புத் திட்ட பொருட் களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.