tamilnadu

img

ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் திறப்பு

கடலூர், நவ. 25- கடலூரில், சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் மணிமண்டபத்தை முதல மைச்சர் எடப்பாடி பழனி சாமி, துணை முதலமைச்சர்  ஓ. பன்னீர் செல்வம் இணைந்து திறந்துவைத்த னர். கடலூரில் பிறந்த ராம சாமி படையாச்சியார் இந்திய  விடுதலைக்காக போராடி யவர்களில் ஒருவர்.  சட்டமன்ற உறுப்பினராக வும், காமராஜர் ஆட்சிக்  காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணி யாற்றிய இவரது பெயரே விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயராக இருந்தது.

ராமசாமி படையாச்சி யாரின் பிறந்தநாள் அரசு  விழாவாகக் கொண்டா டப்படும் என கடந்த ஆண்டு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த ஜூலை மாதம் அவ ரது உருவப்படத்தையும் சட்டப்பேரவையில் முதல மைச்சர் திறந்து வைத்தார்.  இந்த நிலையில் கடலூர்  மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ராமசாமி படை யாச்சியாருக்கு மணி மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. அதனருகே அவ ரின் வெண்கலச் சிலையும் நூலகம் ஒன்றும் அமைக்  கப்பட்டுள்ளது. இவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல மைச்சர் ஓ. பன்னீர்செல் வம் இணைந்து திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி. சம்  பத், கே.சி. வீரமணி, துரைக்  கண்ணு, கடம்பூர் ராஜூ, சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவல்துறை உயரதிகாரிகளும் பங்கேற்ற னர். ராமசாமி படையாச்சி யாரின் மகன் ராமதாஸ் விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.