கள்ளக்குறிச்சி. செப். 15- விழுப்புரம் தெற்கு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட பகத்சிங் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமை யாளர்கள் நலச் சங்கத்தின் 15ஆம் ஆண்டு விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே ஞாயிறன்று (செப். 15) நடைபெற்றது. ஆட்டோ சங்கத் தலைவர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் வி.திருமலை வரவேற்றார். ஆட்டோ சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் எம்.சிவாஜி பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். மாவட்டத் தலைவர் ஏ.ஜெ.ரமேஷ் சங்கக் கொடியை ஏற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜய குமார், செயலாளர் எம்.செந்தில், பொருளா ளர் ஏ.வீராசாமி நிர்வாகிகள் ஆர்.ராஜசேகர், கே.அண்ணாமலை, எஸ்.சேகர், வி.சிவா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கிளை பொருளாளர் சரவணன் நன்றி கூறினார். அகில இந்திய மாநாட்டு நிதியாக 50 ஆயிரம் ரூபாய் மாநிலச் செயலாளர் சிவாஜி யிடம் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.