சென்னை, நவ. 10 - தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில அலுவலகமான ‘து.ஜானகிரா மன் இல்லம்’ திறப்பு விழா ஞாயிறன்று (நவ.10) சென்னையில் நடைபெற்றது. து.ஜானகிராமன் இல்லத்தை சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் திறந்து வைத்து பேசுகை யில், “கடந்தகால தொழிற்சங்க போராட்ட தியாக வரலாற்றை இளந்தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஓய்வூதியர்கள் அதற்கான பணியை செய்ய வேண்டும். மின்வாரியத்தில் ஓய்வுபெற்றுள்ள அனைவரையும் திரட்ட வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியாக சுகுமாறனிடம் தலைவர்கள் 50 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.
நிகழ்வுக்கு மாநிலத் தலைவர் என். சின்னசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எஸ். ஜெகதீசன் வரவேற்றார். சங்க கொடியை கே.ஆர். கணேசன் ஏற்றிவைத்தார். து.ஜானகிரா மன் படத்தை தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வே. மீனாட்சிசுந்தரமும், கல்வெட்டை கே. பாலகிருஷ்ணனும் திறந்து வைத்தனர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் நெ.இல. சீதரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர்நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே. கர்சன், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். அமைப்பின் பொருளாளர் ஆர். ராமநாதன் நன்றி கூறினார். இந்த அலுவலகம் பிளாட் எண்.18, கதவு எண்.28, சுந்தரம் அப்பார்ட்மென்ட், அஜிஸ்நகர் முதல் தெரு, கோடம்பாக்கம், சென்னை-24 என்ற முகவரியில் அமைந்துள்ளது.