tamilnadu

img

ஒரு உயிரைக்கூட இழக்க தயாராக இல்லை: முதல்வர்

சென்னை, மார்ச் 23- தமிழகத்தில் கொரோனா தடுப்பு நட வடிக்கைகளுக்காக கூடுதலாக 500  கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் திங்க ளன்று (மார்ச் 23) கேள்விநேரம் முடிந்த தும், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி சில அறிவிப்புகளை வெளி யிட்டார். அப்போது, “கடந்த 100 ஆண்டுகளில்  சந்திக்காத சவால்களை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எனவே,  அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

கடும் எச்சரிக்கை....

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, கொரோனா வைரஸ் குறித்து வதந்தி களை பரப்புவோர் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று அறிகுறியுடன் யாராவது இருந்தால் பொதுமக்கள் அரசுக்கு தெரி யப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன்  இருப்ப வர்கள் அரசுக்கு தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும்  முதலமைச்சர் எச்சரிக்கை செய்தார். கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் தற்போது உள்ள 92,406 படுக்கை வசதிகளில் 9,266  படுக்கைகளை கொரோனா வைரஸ்  சிகிச்சைக்கு தேவையான தனிமைப்ப டுத்தப்பட்ட படுக்கை வசதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்திக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்துள்ளதால் போதிய வதிகள் உள்ளன. இது தவிர, தற்பொ ழுது கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்ட டங்களில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்  காக கூடுதலாக படுக்கை வசதிகள் விரை வில் தொடங்கப்படவுள்ளன. மேலும்,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி லுள்ள அவசர சிகிச்சை அதிகம் தேவைப்படாத அரசு மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளிலும், கூடுதல்  படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவ டிக்கை எடுக்கப்படுகிறது.முதலமைச் சர் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் 2,05,391 நபர்களுக்கு பரிசோதனை செய்யப் பட்டது. அவர்களில் 9,424 பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கிறார்கள். 198 பேர் அரசு கண்காணிப்பிலும், 54 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளிலும் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், அதற் கான அறிகுறிகள் தென்பட்டு, வேலை செய்யும் இடத்திலோ, விடுதியிலோ, வீட்டிலோ இருந்தால், அவரைப் பற்றிய தகவல்களை அருகாமையில் உள்ள சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அல்  லது 24 மணி நேர மாநில கட்டுப் பாட்டு அறைக்கு உடனடியாக தெரி விக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தவ றும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்  சாலை மேலாளர், விடுதி உரிமையா ளர் மற்றும் குடும்பத் தலைவர் ஆகி யோரின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை களுக்காக ஏற்கனவே ரூ. 60 கோடி நிதி  ஒதுக்கிய நிலையில் தற்போது கூடுத லாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரு உயிரைக்கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி கூறினார்.