ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து மெட்ரோ சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. தற்போது வரை மெட்ரோ ரயில் எப்போது இயக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து கொரோனோ தொற்று பரவாமல் மெட்ரோவை இயக்க முடியுமா என்று மெட்ரோ அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அதில் மெட்ரோ ரயிலில் 50 சதவிகிதம் பயணிகள் மட்டுமே கொண்டு இயக்கலாம் எனவும், மெட்ரோ ரயில் நிலையத்தில் வழங்கப்படும் காயின் போன்ற டிக்கெட்டுக்கு பதிலாக டெபிட் கார்ட் போன்று தொடாமல் பயன்படும் வகையில் டிக்கெட்டை பயன்படுத்தலாம் எனவும் ஆலோசனை செய்து வருகின்றனர்.