tamilnadu

img

மெட்ரோ ரயில் பணியின் போது சரிந்த கட்டடங்கள்

சென்னை, மார்ச் 17- சென்னை தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திடீரென்று கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திரு வொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கி.மீ தூரம் 3,700 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ  ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த  பணிகள் நடைபெற்று வருகிறது. வண்ணா ரப்பேட்டையில் இருந்து தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வரை  பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் செல்வ தற்கான சுரங்கப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அருகே சுரங்கம் அமைப்பதற்காக ராட்சத கிரேன் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் நடை பெறும் போது,  அருகே இருந்த டீ கடை,  பேக்கரி, உணவகங்கள் இருக்கும் கட்டி டங்கள் செவ்வாயன்று காலை திடீரென்று சரிந்து விழுந்தன. டீ கடையை திறப்ப தற்காக வந்த ஊழியர்கள் கட்டிடம் சரிந்து விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்தனர். கட்டிடம் மளமள வென சரிந்து விழுந்ததில் கடையின் உள்ளே இருந்த சிலிண்டர்கள் குளிர்சாதனப்பெட்டி உணவுப் பொருட்கள் என அனைத்தும் இடி பாடுகளில் சிக்கியது. இதனையடுத்து மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்பட்டு காவல் துறையினருக்கு தக வல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தண்டையார்பேட்டை காவல் துறையினர் கட்டிட இடிபாடுகளில் ஊழியர்கள் யாராவது  சிக்கி இருக்கிறார்களா என்பதை கண்கா ணிக்க தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தண்டையார்பேட்டை தீய ணைப்பு நிலையத்தில் இருந்து மூன்று வாக னங்களில் வந்த வீரர்கள் கட்டிட இடிபாடு களில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் யாரும் இடிபாடுகளில் சிக்கவில்லை என்பது தெரிய வந்தது. மெட்ரோ ரயில் பணிகள் எவ்வித பாது காப்பு வசதிகள், முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் இல்லாமல் நடைபெற்று வருவ தால் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல்  ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர்.