ஆம்பூர், ஏப்.28 - திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் பகுதியில் வசித்து வருபவர் அஸ்லம் பாஷா அவரது மனைவி ஷம்சாத், மகன் முகமது அசரர் ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மாற்றுத் திறனாளியான அஸ்லம் பாஷா ஆம்பூரில் தனது மூன்று சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர சைக்கிளில் தினந் தோறும் ரயில் நிலையம் பேருந்து நிலையம் தொழிற்சாலைகள் போன்ற பகுதிகளுக்குச் சென்று டீ விற்பனை செய்து வந்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய மாநில அரசுகள் அறிவித்த 144 தடை உத்தரவை தொடர்ந்து மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் தடை விதிக் கப்பட்டதை அடுத்து இருவரும் வெளியில் வந்து டீ விற்பது முற்றிலும் தடைபட்டதால் வீட்டு வாடகை 1,500 ரூபாயைக் கூட கட்ட முடியாமல் 2 வயது மகன் மற்றும் 5 மாத கர்ப்பிணி மனை வியை வைத்து கொண்டு ரம லான் நோன்பு தொடங்கிய இந்த சூழலில் உண்ண உணவின்றி அவதிப்பட்டு வந்தார்.
வீட்டு வாடகை, உணவுக்கும் மாவட்ட நிர்வாகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இஸ்லாமிய சகோ தரரின் இந்தக் கண்ணீர் பேட்டி வாட்ஸ்அப் மூலம் வைரலானது. இந்த பேட்டியை பார்த்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எடுத்த நடவடிக்கையால் ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் காவ லர்கள், ஆம்பூர் நகராட்சி பொறி யாளர் குமார் மற்றும் அதிகாரி கள் மளிகை பொருட்கள் மற்றும் உணவு காய்கறி தொகுப்புகளை வழங்கினர்.
அதைத்தொடர்ந்து, ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் தலைமையில் திமுக வின ரும் ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினர். அஸ்லம்பாஷா குடும்பத்தி னர் வாடகை வீட்டில் இருப்ப தாக தெரிவித்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் இடத்தை தேர்வு செய்து வீடு கட்டி தரப்படும் என உறுதி அளித்துள்ளார். அதேபோல் தன் னார்வலர்கள் ஏராளமானோர் பண உதவி மற்றும் பொருளுதவி செய்து வருகின்றனர்.