tamilnadu

img

அனைத்து கல்வி வளாகங்களிலும் கழிப்பறை வசதி செய்து தருக!

இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, நவ.10- இந்திய மாணவர் சங்கத்தின் மாணவிகள் மாநில உப குழு கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை கன்வீனர் பிருந்தா தலைமை வகித்தார். மாநில செயலாளர் வீ.மாரியப்பன் சிறப்புரை ஆற்றினார். மத்திய குழு உறுப்பினர் சத்தியா, உபகுழு கன்வீனர் காவியா, துணை கன்வீனர் சரண்யா, திருச்சி மாவட்ட செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பொள்ளாச்சி வழக்கில் தண்டனைக்கு உரியவர்கள் குண்டர் சட்டத்தை ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டும். அனைத்து கல்வி வளாகங்களிலும் கழிப்பறை வசதியை செய்து தர வேண்டும். பெண் கல்விக்கு கூடுதலான நிதி ஒதுக்க வேண்டும். பாடத் திட்டத்தில் மத ரீதியான கருத்துகளை புகுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.