அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சைக்கிள் பிரச்சாரப் பயணத்தை சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், கல்வியாளர் வே.வசந்திதேவி ஆகியோரும், கடலூரில் எழுத்தாளர் இமயமும், கோயம்புத்தூரில் இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திய மாணவர் சங்க அகில இந்திய தலைவர் வி.பி.சானு ஆகியோரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.