சென்னை, மார்ச் 19- மார்க்சிஸ்ட் கம்யூனியூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் வி. தம்புசாமி மறைவுக்கு சட்டப்பேர வையில் வியாழனன்று(மார்1ச்8) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட திருவாரூர் மாவட்டச் செய லாளராகவும் நாகை மாவட்டச் செயலா ளராகவும் பல ஆண்டுகாலம் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் தோழர் வி. தம்புசாமி. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர். கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதோடு சிறைவாசமும் அனுபவித்தவர். தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.உடல் நலக் குறைவால் இம் மாதம் 7 ஆம் தேதி தனது சொந்த ஊரான நாகை மாவட்டம் எட்டுக்குடியில் காலமானார். தமிழக சட்டப்பேரவை வியாழனன்று(மார்ச் 19) காலை 10 மணிக்கு கூடியதும் பேரவைத் தலைவர் ப. தனபால் இரங்கல் குறிப்பை வாசித்தார். அதில், தமிழக சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் வி. தம்புசாமி 7.3.2020 அன்று மறைவுற்றதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். 1989-91 மற்றும் 1991-1996 ஆகிய ஆண்டுகளில் அன்றைய திருவாரூர் தொகுதியில் இருந்து தமிழ சட்டமன்ற பேர வைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சீறிய முறையில் பணியாற்றி னார். அவரது மறைவால் அவரை பிரிந்து வருந்தும் குடும்பத்தி னருக்கு பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். அதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித் துளிகள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.