மானாமதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்முதுபெரும் தோழர் ஜி.ரெங்கசாமி மானாமதுரையில் சனிக்கிழமை இரவு9.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது (97). மறைந்த தோழர் ரெங்கசாமி தீக்கதிர் இராமநாதபுரம் மாவட்டச் செய்தியாளர் ஆர்.மோகனின் தந்தையாவார்.தோழர் ரெங்கசாமி கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் கட்சித் தலைவர்களான தோழர்கள் பி.ராமமூர்த்தி, தோழர் கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட தோழர்களுக்கு ரகசியதபால்களை கொண்டு சென்று சேர்ந்தவர். 1950-ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்துசெயல்பட்டுள்ளார். டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ரெங்கசாமி திடீரென பணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் லாரி ஓட்டுநராக, தனியார் பேருந்துஓட்டுநராக பணியாற்றினார். தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்த காலத்தில்மானாமதுரையிலிருந்து செயல்பட்டார்.
தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டங்களுக்கு தலைமை வகித்ததால். அங்கிருந்தும் பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் மானாமதுரை மாணிக்கம் சன்ஸ் கம்பெனியில் பணியாற்றினார். தீக்கதிர் வண்ணக்கதிரில் “களப்பணியில் கம்யூனிஸ்ட்கள்” என்ற தலைப்பில் மறைந்த தோழர் ஜி.ரெங்கசாமியின் அர்ப்பணிப்பு மிக்கவாழ்க்கையை, தொழிற்சங்க போராட்ட பங்கேற்புகள் குறித்து அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. கட்சி நடத்திய எண்ணற்ற போராட்டங்களில் ரெங்கசாமி பங்கேற்றுள்ளார். தோழர் ரெங்கசாமி மறைவுச் செய்தியறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.தண்டியப்பன், எஸ்.முத்துராமலிங்கபூபதி, மானாமதுரை ஒன்றியச் செயலாளர் ஆண்டி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் எம்.கந்தசாமி, சிஐடியு சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆர்.வீரைய்யா, தீக்கதிர் சிவகங்கை மாவட்
டச் செய்தியாளர் ஜே.ராமச்சந்திரன்.திருப்புவனம் ஒன்றியச்செயலாளர் அய்யம்பாண்டி ஆகியோர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், கே.சாமுவேல்ராஜ், தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருவேல் மற்றும் பல்வேறுவெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் ரெங்கசாமியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.இறுதி நிகழ்ச்சி ஞாயிறு பகல் 12 மணியளவில் மானாமதுரையில் உள்ளஅவரது இல்லத்தில் நடைபெற்றது. தோழர் ரெங்கசாமிக்கு தயாளம்மாள் என்ற மனைவி உள்ளார்.