சிவகங்கை, மே 15- காரைக்குடி ஆட்டோ தொழிலாளர் கள் சங்கம் சிஐடியு சார்பாக 300 ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் வழங்கும் நிகழ்வு நடந்தது. காரைக்குடி டிஎஸ்பி டாக்டர் அருண், வட்டாட்சியர் பாலாஜி, போக்கு வரத்து துறை ஆய்வாளர் ஆனந்தன், பர்மா காலனி துரைப்பாண்டி ,ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வெங்கடேஷ்வரன், செயலாளர் வெங் கட், பொருளாளர் முருகேசன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மானாமதுரை பகத்சிங் ஆட்டோ தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 25 உறுப்பி னர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட் டது. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சிஐடியு மாவட்ட செயலாளர் விஜய குமார், பகத்சிங் ஆட்டோ சங்க பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை சிப்காட் ஆட்டோ தொழி லாளர் சங்கம் சிஐடியு சார்பாக ஆட்டோ தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங் கப்பட்டது.