tamilnadu

img

முறைகேடாக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்க!

மாநில சிறப்பு மாநாடு வலியுறுத்தல்


திருவள்ளூர்,நவ.10 முறைகேடாக வழங்கப் பட்டள்ள  பஞ்சமி நிலங்க ளின் பட்டாக்களை ரத்து செய்து தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் பிப்.25 அன்று சென்னையில் உள்ள நில  ஆணையர் அலுவல கத்தை முற்றுகை யிடப்போவதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீர்மானம் நிறை வேற்றியது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பஞ்சமி நிலம் மீட்பு போராட அறிவிப்பு மாநாடு ஞாயி றன்று (நவ.10) திருவள்ளூ ரில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணைத் தலை வர் எஸ். கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். திரு வள்ளூர் மாவட்டத் தலைவர் ஏ.எழிலரசன் வரவேற்றார்.இதில் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநிலப் பொருளாளர் இ.மோகனா, மாநில துணைப் பொதுச் செயலாளர் மு.கந்தசாமி, மாநிலக் குழு உறுப்பினர் ப.பாரதிஅண்ணா, மண்ணு ரிமை கூட்டமைப்பின் தலைவர் சி.நிக்கோலஸ், சமுக நீதிக் கட்சியின் தலை வர் ந.பன்னீர்செல்வம், நில உரிமை கூட்டமைப்பின் நிர்வாகி என்.தயாளன் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் மாநாட்டை முடித்துவைத்துப்பேசினார். திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் த.கன்னியப்பன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஏராளமான போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ரத்து செய்யப்பட்டுள்ள  பட்டாக்களை உரியவர்களி டம் இதுவரை ஒப்படைக்க வில்லை. இதனை தமிழக அரசு தலையிட்டு நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் பிப்-25 அன்று சென்னையில் உள்ள நில ஆணையர் அலுவலகம் முன்பு பல்லா யிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் முற்றுகை போராட்டம் நடைபெறும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் ஏப்ரல் மாதம் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 500 இடங்களில் நேரடியாக நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும். பஞ்சமி நிலங்கள் பட்டியலின சமுக  பட்டா நிலம் குறித்து வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும். நிபந்தனை பட்டாவை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் நிபந்தனை களை உருவாக்க வேண்டும், தலித் அல்லாதவர்களுக்கு பஞ்சமி நிலம் கைமாறு வதை தடுக்கும் வகையில் பத்திரப்பதிவு செய்யும் போது உறுதிப்படுத்த வேண்டும், 15ஆண்டுக ளுக்கு மேலாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், அனைத்து சமய கோயில் நிலங்களை மற்றும் பூதான நிலம் ஆகியவற்றை அதன் அனுபவதாரர்களுக்கே உரிமையாக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.