சென்னை, டிச. 26 - உள்ளாட்சித் தேர்தல் முடிந்தபின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதி ரான போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95ஆவது அமைப்பு தினம், தோழர் கே.டி.கே தங்கமணி நினைவு தினம், மூத்த தலைவர் ஆர். நல்ல கண்ணுவின் 95ஆவது பிறந்த நாள் என முப்பெரும் விழா வியாழனன்று (டிச.26) பாலன் இல்லத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் கட்சிக் கொடியை ஆர். நல்ல கண்ணு ஏற்றினார். மூத்த தலைவர் தா. பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திமுக தலை வர் மு.க. ஸ்டாலின், ஆர். நல்லகண்ணுவிற்கு சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் பேசிய தாவது:
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த 23 ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன பேரணி நடை பெற்றது. அதில் பங்கேற்ற 8 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. ஆனால், அமைச்சர்கள் 5 ஆயிரம் பேர்தான் பங்கேற்றதாக கூறு கின்றனர். இதில் எது உண்மை என்பதை அவர்கள் விளக்க வேண்டும்?
எதிர்க்கட்சிகள் போராட் டம் நடத்தினால் எண்ணிக் கையை பாதியாக குறைத்து கூறுவதும், ஆளுங்கட்சி தரப்பில் 50 பேர் என்றால் 200 பேர் என்று கூடுதலாகச் சொல்வதும் காவல்துறையின் வழக்கம். 8 ஆயிரம் பேர் மீதல்ல, 8 ஆயிரம் வழக்கு களை போட்டாலும் அதை சந்திக்க தயாராக இருக்கி றோம். திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு, கூட்டணி கட்சித் தலைவர்கள், கட்சி களுக்கு அப்பாற்பட்டவர் களையும் அழைத்து பேசி அடுத்தகட்ட போராட்டம் நடைபெறும். இந்தியா விலேயே இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை என்று கூறுகிற வகையில் அந்த போராட்டம் இருக்கும். மார்க்சியத் தத்துவத்தின் மனித உருவமாக நல்ல கண்ணு உலவுகிறார். அடித்தள மக்களுக்காக தொடர்ந்து போராடுகிறவர். எளிமையாக, இனிமையாக, கம்பீரமாக, துணிவாக, போராளியாக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய நல்ல கண்ணு அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து வழிகாட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.
சிபிஎம் தலைவர்கள்
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்க ராஜன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் ஏ. ஆறுமுகநயி னார் ஆகியோர் நல்ல கண்ணுவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரி வித்தனர். விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா செல்போனில் தொடர்பு கொண்டு ஆர். நல்ல கண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திரா விடர் கழகத் தலைவர் க.வீர மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அம முக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டு அரசியல் கட்சித் தலை வர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் அறிக்கைகள், சமூக வலைதளங்கள் மூல மும், நேரிலும், செல்போன் வாயிலாகவும் வாழ்த்து தெரி வித்தனர்.