உதகை, ஜன.20- கூடலூர் அருகே அதிகாலையில் இரண்டு புலிகள் சாலையை கடந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் - கோழிக் கோடு சாலையில் மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த சிலர் சனியன்று அதிகாலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மரப்பாலம் புதிய டிரான்ஸ்பார்மர் அருகே உள்ள தனியார் தோட்டத்திலிருந்து இரண்டு புலிகள் கோழிக்கோடு சாலையை கடந்து சென்றது. இதனைக்கண்ட நடை பயிற்சி மேற்கொண்டவர்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து வன ஊழி யர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அப்பகுதியில் ஆய்வை மேற்கொண்ட வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி யுள்ளனர்.