உதகை,மார்ச் 9- முதியோர் உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நீலகிரி மாவட்ட ஆட்சிய ரிடம் முதியவர்கள் மனு கொடுத்தனர். நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறைத்தீர்கும் நாள் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை வகித் தார். இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா எருமாடு கிராமத்தில் வசிக்கும் முதியவர்கள் சிலர் தங்க ளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரி மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து வருகிறோம். அரசு நடத்தும் முகாம் களுக்கு சென்றும் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இது வரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். மேலும், எங்களை கவனித்து கொள்ளவும், மருந்து மாத்தி ரைகள் வாங்கவும் பணமில்லாமல் தவிப்பதாக வேதனை தெரிவித்தனர். எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.