செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
செங்கல்பட்டு, செப்.3- தாம்பரத்தையடுத்த சிட்லபாக்கத்தில் ஒரே பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புல எண் 256ல், 256/2 , 256/3 இவற்றிற்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது போன்று 256/1ல் குடியிருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செய லாளர் ப. டில்லிபாபு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் விவரம் வருமாறு: தாம்பரம் வருவாய் கோட்டம் சிட்லபாக் கம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியார் தெரு , ஆனந்தா நகர் , மற்றும் ராமகிருஷ்ணாபுரம் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 1000க்கும் மேற்பட்டோர் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டு களுக்கு முன்பிருந்தே , புல எண் 256 , 255 மொத்த நிலப்பரப்பில் சிட்லபாக்கம் ஏரியை ஒட்டி உள்ள பகுதியைக் கடந்த 1972 ஆம் வருடம் மாவட்ட நிர்வாக ஆய்வு செய்து, பரிசீலித்து இரண்டு மூன்று தலைமுறை களாக வாழ்ந்து வருபவர்களுக்கு வரன் முறைப்படுத்தி வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டன. குறிப்பாக புல எண் 256 உட்பிரிவு செய் யப்பட்ட 256/1 , 256/2 , 256/3 , 256/4 , நில வகை மாற்றம் செய்து அரசின் அ பதிவேட்டில் கிராம நத்தம் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது.
கடந்த 1972 ஆம் ஆண்டு மற்றும் 1980, 1981 , 1982 ஆகிய ஆண்டுகளில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளன. ஆனால் புல எண் 256/1ல் குடியிருக்கும் ஒரு பகுதியினரான பெரியார் தெரு , ஆனந்தா நகர், மற்றும் ராமகிருஷ்ணாபுரம் பகுதிகளி லுள்ள 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்படவில்லை. இவர்கள் வீட்டு வரி , மின் இணைப்பு கட்ட ணம், குடிநீர் இணைப்பு கட்டணம் அனைத்தை யும் செலுத்தி வருகின்றனர் . மாவட்ட நிர்வாக மும் இம்மக்கள் குடியிருக்கும் பகுதி களுக்குச் சாலை வசதி , தெருவிளக்கு என அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதி களையும் ஏற்படுத்தித் தந்துள்ளன . ஏரிக்குக் கீழிருந்த அனைத்து விவசாய நிலங்களும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகக் குடியிருப்பாக மாற்றப்பட்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிட்லபாக்கம் ஏரிக்கு தற்போது பாசனப் பகுதி ஏதும் கிடையாது. 1997 ல் அன்றைய மாவட்ட ஆட்சி யரும் தற்போது தமிழ்நாடு அரசின் தலை மைச் செயலாளருமான வெ. இறையன்பு, இப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கை கள் பரிசீலித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அன்றைக்கே வட்டாட்சியர்க ளுக்கு உத்தரவிட்டார். அதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றிய பெ.அமுதா , இப்பகுதியை 2015 ஆம் ஆண்டு தேரில் வந்து பார்வையிட்டு வகை மாற்றம் செய்து வீட்டுமனைப்பட்டா வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதே பெரியார் தெரு மற்றும் ஆனந்த நக ரில் குடியிருக்கும் மக்களுக்கு ( பி.டில்லி பாபு , அரூர் சட்டமன்ற உறுப்பினராக பணி யாற்றிய போது 2012 ஆம் ஆண்டில் 25 வீடு களுக்கு இதே பகுதியில் வீட்டுமனைப்பட்டா பெற்றுத்தரப்பட்டுள்ளது.
குறிப்பாக பெரி யார் தெருவில் ஒருபகுதிக்குப் பட்டா வழங்கி மீதமுள்ள குடியிருப்புகளுக்கு பட்டா கிடைக்காமல் உள்ளது. தமிழ்நாடு அரசு , அரசாணை ( நிலை ) எண் 480 ( 11.09.2020 ) ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலப்பகுதியை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்கலாம் என்ற அறிவித்துள்ளதால் சிட்லபாக்கம் பெரியார் தெரு , ஆனந்தா நகர் மற்றும் ராமகிருஷ்ணா புரம் பகுதிகளை ஆட்சேபனையற்ற நிலப் பகுதியாக பரிசீலிக்க வேண்டும். மேலும் 1992 ம் ஆண்டில் சிட்லபாக்கம் பேரூராட்சி யில் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு அப்போதைய மாவட்ட நிர்வா கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது . எனவே மாவட்ட ஆட்சியர் , இதன் மீது தனிக் கவனம் செலுத்தி எவ்வாறு புல எண்-256 ல், உட்பிரிவு செய்து 256/2 , 256/3 , 256/6, இவற்றிற்கு எவ்வாறு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டதோ , அதே போல் பெரியார் தெரு , ஆனந்தா நகர் மற்றும் ராமகிருஷ்ணாபுரம் பகுதிகளில் குடி யிருக்கும் மீதமுள்ள 420 வீடுகளுக்கும் தாங்கள் வரன்முறை செய்து வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.