உதகை, ஜூலை 27- இரண்டாவது சீசனுக்காக உதகை தாவரவியல் பூங்கா வில் 140 வகையான 2.5 லட்சம் மலர் செடிகள் நடவுப் பணி கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கொரோனா பாதிப்பு உள்ள தால் பூங்காவைக் காண சுற்றுலா பயணிகள் அனுமதிக் கப்படுவது கடினம். ஆகவே, இம்முறை இரண்டாவது சீச னுக்காக பூங்கா முழுவதிலும் 2.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.
மேலும், 7 ஆயிரம் மலர்த் தொட் களில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு அலங்கார மாடத் தில் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக வைக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. மேலும், பிரெஞ்ச் மற்றும் இன்கா மேரி கோல்டு, சாவ்வியா உட்பட 140 வகையான மலர் நாற்று கள் நடவு செய்யப்பட்டுள்ளது என்றார்.