விவசாயிகள்-வியாபாரிகள் வேதனை
ஊரடங்கு உத்தரவு காரணமாக மரக் கன்றுகள், மூலிகைச் செடி, பூ செடி நாற்றங்கால் விற்பனையாகாமல் அழிந்ததால் விவசாயி களும், அதனை நம்பியிருந்த ஆயிரக்கணக் கான தொழிலாளர்களும், வியாபாரிகளும் வருமானத்தை இழந்து பாதித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் வேகாக் கொல்லை, குறிஞ்சிப்பாடி, கோரணப்பட்டு, விருதாச்சலம், சத்திரம், ஆகிய இடங்களில் நாற்று உற்பத்தி பண்ணைகள் அதிகளவில் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் செடிகள் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற செம்மண் இயற்கையாகவே கிடைப்ப தால் கூடாரம் அமைத்து நாற்றுகளை உற்பத்தி செய்கின்றனர்.
இங்கு பல வகையான பூ செடிகள், மூலி கைச் செடிகள், பழ மரக் கன்றுகள், அழகு செடிகள் என 200-க்கும் மேற்பட்ட ரகங்கள் ஆண்டுக்கு பல லட்சம் கணக்கில் நாற்றங் கால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகம் முழுவதும் உள்ள பண்ணை கள், விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்ப டுகின்றன. சில நாற்றுகள் வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2011 டிசம்பர் 27 அன்று கடலூர் மாவட்டத்தை புரட்டிப் போட்ட தானே புயலால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும், சுமார் இரண்டு கோடி மரங்களை வேரோடு சாய்த்து மாவட்டத்தையே பாலைவன மாக்கி யது. இதில் நூற்றாண்டுகளை கடந்த மரங்கள் அதிகம். இதனை ஈடு செய்வதற்கு பல்வேறு அமைப்பும், அரசும் மாவட்டம் முழுக்க மரக்கன்றுகளை நட்டன.
மேலும், தானே புயலுக்கு பிறகு இம்மாவட்டத்தில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் தாம்புல பைகளுக்கு மாற்றாக மரக் கன்று கள், மூலிகை செடி, மலர் கன்றுகளை வழங்கி வருகின்றனர். இதனை மகிழ்ச்சி யுடன் கொண்டு சென்று வீடுகளில் வளர்க்க தொடங்கினார். இதற்கு பேரூதவி புரிந்ததும் இந்த நர்சரி நாற்றங்கால் தான். இன்று வரைக்கும் இந்த நடைமுறை தொடர்கிறது.
தற்போது கொரோனா வைரஸ் பரவ லைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுப நிகழ்ச்சிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே நடைபெறு கின்றன. அதிலும் மிகக் குறைந்த நபர்களே பங்கேற்கின்றனர். இதனால், பண்ணை களில் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டங்கள் செடிகள் கோடிக்கணக்கில் தேக்கமடைந் தது. கடந்த ஒரு மாதமாக பராமரிப்பு இல்லா மல் அனைத்து செடிகள் அனைத்தும் அழிந்து விட்டன. இனி புதியதாகத்தான் நாற்றாங்கள் தயார் செய்ய வேண்டி யுள்ளது. இதற்கு புதிய முதலீடுகளுக்கு அர சின் கடனுதவியை எதிர்பார்த்து காத்தி ருக்கின்றனர் நாற்றாங்கால் விவசாயிகள்.
இதுகுறித்து வேகாக் கொல்லை நாற்றங்கால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ரா.விஜயராகவன் கூறுகையில்,” எங்கள் பகுதியில் உள்ள பண்ணை களில் மார்ச், ஏப்ரல் மாத விற்பனைக்காக உற்பத்தி செய்த நாற்றுகள் அனைத்தும் ஊரடங்கால் தேங்கியுள்ளன. இவை அழுகி யும், கருகியும் வருவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது”என்றார்.
இந்தியன் நாற்றங்கால் உற்பத்தியா ளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்ப.சக்தி வேல், “இந்தப் பகுதிகளில் உள்ள நாற்றங் கால் பண்ணைகளில் நேரடியாகவும், மறை முகமாகவும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல, மாநிலம் முழுவதும் சுமார் 20,000 தொழி லாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்” என்றார்.
இந்தத் தொழில் ஈடுபட்டுள்ள பெரும் பாலானோர் ஏழ்மையில் உள்ளவர்களே என்றும் தமிழ் நாட்டில் 90 சதவீதம் நாற்றங் கால் உற்பத்தி பண்ணைகள் குடிசைத் தொழிலாகவே நடைபெறுகிறது என்றும் கூறினார். கடன் வாங்கி உற்பத்தி செய்த நாற்றுகள் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தர வால் விற்பனை செய்ய முடியாமல் வீணாகிய தால் நிவாரணமும், மானியமும், இலவச மின்சாரமும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
-வ.சிவபாலன்