கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சிதம்பரம், ஜூலை 3- நெய்வேலி அனல் மின் நிலை யத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் கை யூட்டு பெற்றுக்கொண்டு கொதி கலன் பராமரிப்பைத் தனியாரிடம் விட்டதே விபத்துக்கு காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் குற்றம்சாட்டியுள்ளார். நெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி யாகினர். 17 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினரை வியாழனன்று கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப் பினர் மூசா மற்றும் சிஐடியு தலை வர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி னர். பின்னர் வெள்ளியன்று கே.பால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
என்எல்சி விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு நிர்வாகம் ரூ30 லட்ச மும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந் தர பணியும், காயமடைந்தவர் களுக்கு ரூ 5 லட்சம் மற்றும் மருத்து வச் செலவை வழங்குவதாக ஒப்புக் கொண்டதற்கு சிஐடியு சங்கம் உள் ளிட்ட அனைவரின் கூட்டு முயற்சி தான் காரணம். விபத்தில் காயம டைந்தவர்கள் மறுபடியும் அவர்கள் வேலை செய்வதற்கான தகுதியான உடல்நிலையில் உள்ளார்களா என ஆய்வு செய்து அவர்களுக்குப் பணி வழங்க வேண்டும். உடல் தகுதி இல்லையென்றால் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும்.
அடிக்கடி விபத்துக்கள் ஏன்? ஆய்வுசெய்க!
இரண்டாவது அனல் மின் நிலை யத்தில் கடந்த 2019 ஆண்டு மற்றும் 2020-ம் ஆண்டு விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் விபத்து நடந்து 2 மாதம் கடந்தவுடன் அடுத்த விபத்து ஏற்பட்டு தற்போது 6 பேர் உயிர் இழந்துள்ளனர். 17 பேர் மிக வும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 2-வது அலகின் 5 மற்றும் 6-வது யூனிட்டில் தொடர்ந்து விபத்து நடைபெறுகிறது. தொடர் விபத்துக்கான காரணத்தை நெய் வேலி என்எல்சி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.
தனியார் ஒப்பந்தம்
இந்த 2-வது மின் நிலையம் கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்படுகிறது, அப்போதெல்லாம் விபத்து ஏற்பட வில்லை. தற்போது தொடர்ந்து விபத்து நடப்பது குறித்து விசாரித்த போது சில விபரங்கள் தெரியவந் துள்ளன. பொதுத்துறை நிறுவன மான திருச்சி பெல் தொழிற்சாலை யிலிருந்து கொதிகலன்கள் வாங்கப்படுகிறது; ஆனால் அத னைப் பராமரிக்கும் பணியை அவர் களுக்குக் கொடுப்பதில்லை. அதற்கு மாறாகத் தனியார் ஒப்பந்த தாரர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் அதனைச் சரியாகப் பரா மரிக்காமலிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள அதிகாரிகள் தனி யார் ஒப்பந்ததாரர்களிடம் உறவு வைத்துக் கொண்டு கையூட்டு பெற்று இது போன்ற பணியை வழங்கு வதால் தொடர்ந்து விபத்து நடை பெறுகிறதோ என்ற சந்தேகம் எழு கிறது. அப்போதே இதுகுறித்து அறிந்த என்எல்சியில் அங்கீகாரம் பெற்ற சிஐ டியு தொழிற்சங்கம் தனியார் ஒப்பந்த பணியாளர்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறுபட்ட போராட்டங்களை நடத்தியது. இதனை என்எல்சி நிர்வாகம் அலட்சி யப்படுத்தியதால் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு இதனை பத்தோடு பதினொன்றாகக் கருதி இழப்பீடு கொடுத்துவிட்டோம் என்று முடிவுக்கு வராமல் உரிய அதிகாரி களைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். தனியாருக்கு ஒப்பந்தம் விட்டதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்து ஒரு தொழிலாளி கூட உயிரிழக்கும் நிலை ஏற்படக்கூடாது இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் திருஅரசு, என்எல்சி சிஐடியு தொழிற்சங்கத்தின் தலைவர் வேல் முருகன், பொதுச்செயலாளர் ஜெய ராஜ், பொருளாளர் சீனிவாசன், அலு வலக செயலாளர் குப்புசாமி உள் ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.
(ந.நி.)