காஞ்சிபுரம், மே 4- கொரோனா தொற்று பர வலை தடுப்பதற்காக நாடு முழு வதும் ஊரடங்கு விதிக்கப் பட்டுள்ளது. பட்டு சேலைக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டு நெசவாளர்கள் வேலை யின்றி வருமானமின்றி மிகவும் பரிதாபத்தில் உள்ளனர்.
ஒரு சில தொழில்களை தவிர அனைத்து தொழில்களும் முடக் கப்பட்டு அந்தத் தொழிலை சார்ந்தவர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். உலக அளவில் புகழ்பெற்ற பட்டுசேலை உற்பத்திகள் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெசவு செய்யப்படுவதாகும்.இந்த பட்டு சேலையை நெய் யக்கூடிய நெசவாளர்கள் கடந்த 22 ஆம் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், வேலையில்லா மல் வருமானமின்றி மிகவும் பரி தாப நிலையில் உள்ளனர்.
தங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கடந்த 31ம் தேதி கைத்தறி துறை துணி நூல் உதவி இயக்குனர் அவர்களுக்கு மனு கொடுத்தனர். தற்போது ஊர டங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ள தால், நெசவாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ஒரு குடும்பத்திற்கு ரூபாய் பத்தா யிரம் நிவாரணமாகவும், இரண்டு மாதத்திற்கான உணவு பொருட் கள் மொத்தமாக ரேஷன் கடை மூலம் வினியோகம் செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து காஞ்சிபுரம், குருவி மலை, கேஎஸ்பி நகர் பகுதிகளை சேர்ந்த 213 நெசவாளர்கள் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கைத் தறித் துறை உதவி இயக்குனரிடம் மனு கொடுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெச வுத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே ஜீவா தலைவர் விஜயலட்சுமி பதில் செயலாளர் எஸ் பழனி நிர்வாக குழு உறுப்பினர் பாண்டியன் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சிவா 7அறிவு ஸ்ரீநகர் நெசவா ளர்கள் குமார் சீனிவாசன் உட்பட பலர்(50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து மாவட்ட மாநில நிர்வா கங்களுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி இயக்குநர் கூறியதாக இ.முத்துக்குமார் தெரிவித்தார்.