tamilnadu

ஆஷா ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்கிடுக - சிஐடியு வலியுறுத்தல்

 பொள்ளாச்சி, ஜூன் 28-  வால்பாறை பகுதியில் பணிபுரியும் ஆஷா ஊழியர்க ளுக்கு மாத ஊதியம் வழங்கிடக்கோரி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் (சிஐடியு) வலி யுறுத்தியுள்ளது.   இதுகுறித்து, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற் றும் அலுவலர்கள் சங்கத்தின்  கோவை மாவட்டச் செய லாளர் பி.பரமசிவம் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட் டம், பொள்ளாச்சி அடுத்த வால்பாறை மலைப்பகுதிகளில் 11 ஆண்டுகளாக 45 ஆஷா ஊழியர்கள் தன்னார்வலர்களாக அப்பகுதி மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் பணி யாற்றி வருகின்றனர்.

 மலைப்பகுதிப் பெண்களின் மகப் பேறு காலத்தில் குழந்தை பிறப்பிற்காக வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து, பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது, தடுப்பூசி முகாம்கள், கர்ப் பிணி பெண்களுக்கான மகப்பேறு கால பரிசோதனைகள், ரத்த வங்கிகளின் மூலமாக ரத்த தான முகாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.  ஆனால் இவர்களுக்கு குழந்தை பிறப்பு அடிப்படையின் மூலமாகவே ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இது அவர்களது வாழ்வாதாரத்தினை கேள்வி குறியாக்குகிறது. குறிப்பாக வால்பாறை மலைபகுதிகளில் வசிக்கின் றவர்களில் பெரும்பாலோனோர் தினக்கூலிகளாக ஏழை, எளிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர்.

இவர் கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள் ளனர். இந்நிலையில், ஆஷா ஊழியர்களின் சேவை மிகவும் முக்கியமானதாகும். இதனை கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு ஆஷா ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.