சென்னை:
வெளி மாநில தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்குஅனுப்பும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றுஅரசை சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில்நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் வெளிமாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் 50 நாட்களுக்கு மேலாக வேலையில்லாமல், வருமானமில்லால் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தமிழக அரசு தரப்பில் வெளிமாநில புலம் பெயர்ந்ததொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தங்குமிடம் மற்றும்உணவு போன்ற ஏற்பாடுகள் மற்றும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டன.மத்திய அரசு மே 3 ஆம் தேதி மூன்றாம் கட்ட ஊரடங்குநீட்டிக்கப்பட்ட போது வெளிமாநில தொழிலாளர்கள் சொந்தமாநிலத்திற்கு செல்வதற்கு அனுமதி அளித்தது. அதனடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு ஒரு பகுதி தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு சொந்த மாநிலத்திற்கு சென்றுள்ளனர். பெரும் பகுதி தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர்சாலைகளில் நடந்தும், மிதிவண்டிகளிலும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இது போன்று வேறு மாநிலங்களில் நடந்து செல்வோர் விபத்துகளில் சிக்கி பலியாகி வரும் சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இத்தகைய நிலைமை தமிழகத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு ஏற்படாத வகையில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஒரு சில இடங்களில் வெளி மாநிலத் தொழிலாளருக்கு சேர வேண்டிய சம்பளம் மறுக்கப்படுவதாகவும், சில நிறுவனங்கள் சொந்தஊருக்கு செல்வதை தடுப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளதையும் தமிழக அரசு கவனத்தில் எடுத்து தலையிட வேண்டும்.தற்போது ஊரடங்கு 4 ஆம் கட்டமாக நீடித்துள்ளதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி என மாநிலம் முழுவதும் பரவலாக உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப வேண்டி கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். சிலஇடங்களில் காவல்துறையினர் கடுமைகாட்டுவது மனிதாபிமானமற்ற செயலாகும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையினை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.