tamilnadu

img

சிந்துவீர் நீர்மூழ்கிக் கப்பலை மியான்மர் வாங்குகிறது

தில்லி 
 நாட்டின் பாதுகாப்புக்கு 31 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கும் சிந்துவீர் நீர்மூழ்கிக் கப்பலை இந்திய அரசு ரஷ்யாவிடம் வாங்கியது. இந்த கப்பலை அண்டை நாடான மியான்மர் வாங்குகிறது.3000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் அதிக செயல்திறன் கொண்டது.மேலும் டீசல், மின்சாரத்தில் இயக்கும் சிறப்புப் படகு இந்த நீர்மூழ்கிக் கப்பலோடு இணைக்கப்பட்டுள்ள நிலையில்,2020ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் மியான்மர் அரசு அந்நாட்டுக் கடற்படையில் இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல சிந்துகோஷ் நீர்மூழ்கிக் கப்பலையும் இந்தியாவிடமிருந்து வாங்க மியான்மர் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவும் ஆசியப் பிராந்தியத்தில் ஆயுதம் விற்பனை செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.