tamilnadu

img

கத்தார் நாட்டில் வேகமெடுக்கும் கொரோனா... 

தோஹா 
அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கொரோனா புதிய வேகத்தில் பரவி வருகிறது. தினமும் 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதால் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 55 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக கத்தாரில் கொரோனா பரவல் வேகம் ஜெட் வேகத்தில் இருந்தாலும், இறப்பு விகிதம் மந்தமாக தான் உள்ளது. இதுவரை அங்கு 36 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று யாரும் பலியாகவில்லை. 25 ஆயிரத்து 800 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

எனினும் கத்தார் நாட்டில் ஒரு அதிர்ச்சி சம்பவம் வலம் வருகிறது. அதாவது மார்ச் 26-லிருந்து மே 20 வரை 3 மாத கால இடைவெளியில் வெறும் 15 பேர் தான் பலியாகிருந்தனர். ஆனால் மே 21 லிருந்து இன்று வரை 21 பேர் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர். இது அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.