டோக்கியோ
கொரோனா என்னும் கொடிய ஆட்கொல்லி வைரஸ் உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வருகிறது.
இந்த கொரோனா வைரஸால் தினமும் 1500 பேர் வீதம் உயிரிழந்து வருவதால் உலகில் 75000-க்கும் பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவை மையம் கொண்டுள்ள கொரோனா அங்கு 10,000-க்கும் அதிகமானோரைக் காவு வாங்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஜப்பான் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள தலைநகர் டோக்கியோ, ஒசாகா மற்றும் 5 பிராந்தியங்களில் அவசர நிலையைக் கொண்டுவருவதாக அந்நாட்டுப் பிரதமர் பிரதமர் ஷின்ஜோ அபே அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே அமெரிக்கா அரசு கொரோனாவை கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடனப்படுத்தை நடைமுறையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.