tamilnadu

img

ஆமாம்.. புத்தர், நேபாளிதான்... பின்வாங்கியது... மோடி அரசு!

புதுதில்லி:
கௌதம புத்தரை இந்தியர் என்ற பொருள்படும் வகையில், மத்தியவெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர்எஸ்.ஜெய்சங்கர் பேசியிருந்தார்.

ஆனால், நேபாளத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஜெய்சங்கர் அவ்வாறு கூறவில்லை என்று வெளியுறவுத்துறை தற்போது பின்வாங்கியுள்ளது.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry -CII) ஏற்பாடு செய்த இணையவழி உச்சி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உரையாற்றும் போது, இரண்டு சிறந்த இந்தியர்களில் ஒருவர் மகாத்மா காந்தி, மற்றொருவர் கௌதம புத்தர் என்று கூறியதாக செய்திகள் வெளியாகின.இதற்கு உடனடியாக நேபாளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.“கௌதம புத்தர் நேபாளத்தின் லும்பினியில் பிறந்தார் என்பதற்கானவரலாற்று உண்மை, மறுக்க முடியாத ஆதாரங்களால் நிரூபிக்கப்பட் டுள்ளது” என்று நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பதிலடி கொடுத்தார். 2014-ஆம்ஆண்டு நேபாளம் வந்த போது ‘உலகிற்கு அமைதியை போதித்த புத்தர் பிறந்த நாடு நேபாளம்’ என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே கூறியிருக்கிறார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“கௌதம புத்தர் பிறப்பால் நேபாளி. லும்பினியில் பிறந்தவர். நேபாளம் மற்றும் புத்தாயிஷசம் ஆகியவை மனித குலத்தின் பொதுவானபாரம்பரியம்! உரிமைகோரல் மட் டுமே மிகப்பெரிய சிந்தனையாளரின் நிலையை மாற்றாது. கடந்த 3000 ஆண்டுகளில் வாழ்க்கை மற்றும் உலகின் ஆசிரியர் புத்தர்” என்று நேபாளத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் லீலா மணியும் குறிப்பிட்டிருந் தார்.

இந்நிலையில், “சிஐஐ நிகழ்வில்வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் புத்தரின் பாரம்பரியத்தையே குறிப்பிட்டார். மற்றபடி கௌதம புத்தர் நேபாளத்தில் உள்ள லும்பினியில்பிறந்தார் என்பதில் சந்தேகமும் இல்லை” என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா பின்வாங்கியுள்ளார்.