tamilnadu

img

காங்கிரஸ் போட்டி வேட்பாளர் விலகினார்


மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூரு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து,தற்போதைய காங்கிரஸ் எம்.பி. முத்தாஹனுமே கவுடா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந் நிலையில் காங்கிரஸ் அழைத்து கண்டித்ததைத் தொடர்ந்து, தற்போது முத்தாஹனுமே கவுடா, வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுள்ளார். இதன் மூலம், காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் ஏற்பட்ட சிக்கல் விலகியுள்ளது.