tamilnadu

img

ஓராண்டுக்குள் 4 சதவீத வாக்குகள் குறைந்தது... தற்போது தேர்தல் வந்தால் 32 இடங்களை பாஜக இழக்கும்!

புதுதில்லி:
மக்களவைக்கு தற்போது தேர்தல்நடைபெற்றால், ஏற்கெனவே வெற்றிபெற்ற 32 தொகுதிகளை பாஜக இழக்கும் என்று ‘மூட் ஆப்நே ஷன்’ சர்வேதெரிவித்துள்ளது. ‘இந்தியா டுடே குழுமம்- கார்விஇன்சைட்ஸ்’ இணைந்து நடத்திய ‘மூட்ஆப் நேஷன்’ சர்வேயில் இது தொடர் பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது:2019 மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 303 இடங்களைப் பெற்றது. தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் பாஜகவுக்கு 271 இடங்கள்தான் கிடைக்கும். பெரும்பான்மைக்கு ஒருஇடம் தேவை என்கிற நிலை பாஜகவுக்கு ஏற்படும்.

சிவசேனா விலகல், நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் ஆகியவற்றால் ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கெனவே வென்ற இடங்களில் 50 தொகுதிகளை இழக்கும்.அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குகூடுதலாக 8 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மொத்தமாக 15 மக்களவைத் தொகுதிகளைக் கூடுதலாக பெறும்.2019-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்வாக்கு சதவிகிதம் 4 சதவிகிதம் குறையக் கூடும். மறுபுறத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வாக்கு 2 சதவிகிதம் அதிகரிக்கும். ஐக்கிய முற் போக்குக் கூட்டணியில் சிவசேனா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து மெகாகூட்டணி அமைந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான பெரும்பான்மைபலம் கடுமையாக பாதிக்கப்படும்.இவ்வாறு ‘மூட் ஆப் நேஷன்’ சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.