புதுதில்லி, மார்ச் 5- நாட்டின் 2021 சென்சஸ் கணக்கெ டுப்புடன், மத்திய அரசு புதிதாக முன்மொ ழிந்துள்ள தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான விவரங்களையும் தொகுக்கக்கூடாது என்று உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் 190 பொருளாதார நிபுணர்களும், சமூக அறிவியலாளர்களும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கோரியிருப்பதாவது: இந்தியாவின் சென்சஸ், நாட்டின் மக்கள்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பம் குறித்த அடிப்படைகளையும் அளிப்பதால் இது மிகவும் முக்கியமான தரவு ஆகும். மக்கள் தொகை குறித்து ஒரு மதிப்பீட்டிற்கு வரவும் மற்றும் அவர்களின் நிலைமைகளை ஆரா ய்ந்திடவும், அவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வரையறுத்திடவும் அவசியமானதாகும். மேலும் சென்சஸ் தரவுகள், மத்திய- மாநில அரசுகள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமைகளை மேற்கொள்வதற்கும் மிகவும் முக்கிய மானவைகளாகும். எனவே, சென்சஸ் தரவுகளைத் தொகுப்பது என்பது மிகவும் பாதுகாப்பானதாக இருப்ப தோடு, வேறெந்த காரணிகளாலும் மாசு படத்தக்கதாக அமைந்துவிடக் கூடாது என்பதும் அவசியமாகும். எனினும், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைச் சுற்றி உள்ள அம்சங்கள் உண்மையான ஆபத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. இதனை மேற்கொள் பவர்கள் ஒரு நபரின் குடியுரிமை யைத் தீர்மானிப்பதில் “சந்தேகத்திற் குரியவர்” என்று முத்திரைகுத்தும் ஆபத்து இருப்ப தாகக் கணிசமானவர்கள் பயப்படு கிறார்கள். இதன் விளைவாக தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்து ஏற்கனவே மிகவும் விரிவான அள வில் மக்கள் மத்தியில் அவநம்பிக்கை யையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் இதனால் ஏதாவது பயன் ஏற்படுமா என்றும் தெளிவாகத் தெரியவில்லை. சென்சஸ் தரவுடன் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டையும் மேற்கொள் வது 1948ஆம் ஆண்டு சென்சஸ் சட்டத்தின் 15ஆவது பிரிவை மீறிய செயலுமாகும். மேற்படி பிரிவானது, ஒரு சென்சஸ் அதிகாரி தன் கடமையை ஆற்றுகிறபோது, வேறெவரும் எந்த புத்தகத்தையோ, பதிவேட்டையோ அல்லது பதவுருக்களையோ கொண்டு வரத் தடை விதிக்கிறது. மேலும் அது, அவ்வாறு மேற்கொள்ளப்படும் எவ்விதமான பதிவும் இந்தச் சட்டத் தின்கீழ் வழக்கு தொடர பயன்படுத்து வதைத்தவிர வேறெந்த சிவில் நீதி மன்றத்திற்கும் சாட்சியமாக எடுத்துச் செல்ல முடியாது என்றும் தெரிவிக் கிறது. எனவேதான் 2021 சென்சஸ் நேர்மை யுடன் பேணிப்பாதுகாத்திட வேண்டும் என்பதற்காக, இதனை தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டிலிருந்து முற்றிலுமாக கத்தரித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எப்படிப் பார்த்தாலும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்காக தரவு சேகரிப்ப தற்கான முயற்சியைக் கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரி யுள்ளார்கள். இவ்வாறு கையெழுத்தி ட்டுள்ள 190 பேர்களில் பொருளாதாரப் பேராசிரியர்கள் வெங்கடேஷ் ஆத்ரேயா, அபிஜித் முகோபாத்யாயா, அபிஜித் சென், சி.பி. சந்திரசேகர், ஜெயதி கோஷ், கே. நாகராஜ், ஆர்.நாகராஜ், எம். விஜயபாஸ்கர், பத்மினி சாமிநாதன், பிரசென்ஜித் போஸ், இர்ஃபான் ஹபீப், எஸ். கிருஷ்ணசாமி, எஸ். சுப்பிரமணியன், சசி குமார், உத்சா பட்நாயக் முதலானவர்களும் கையொப்பமிட்டிருக்கிறார்கள்.