tamilnadu

img

இந்தியாவுக்கு வருமா பொருளாதார நெருக்கடி..?

இந்தியாவும் சீனா இரண்டு நாடுகளும், இன்று உலக அரங்கில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்து இருக்கின்றன.இந்த இரண்டு நாடுகளும் அடுத்த சில வருடங்களில்  உலகின் பொருளாதார வல்லரசுகளாக மாற அதிக வாய்ப்புள்ளது.

வல்லரசு கனவின் முதல் படியாக  சீனா பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தை தொடங்கியுள்ளது . இந்த திட்டத்தின் படி தெற்காசியா தொடங்கி, ஐரோப்பா வரை சுலபமாக  வர்த்தகம் செய்ய உள்ளது.இதன் மூலம்  பொருட்களை அதிவேகமாக  உலக நாடுகளுக்குள் விநியோகம் செய்ய உள்ளது. இப்படி சீனா, வளர்ச்சியின் பெயரைச் சொல்லி பல நாடுகளை தன் வளைக்குள் இழுக்கிறதாக சொல்கிறது அமெரிக்கா.இதற்காக அமெரிக்கா சீனா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்தியாவும் சீனாவின் மீது கொண்ட எல்லை பிரச்சனை காரணமாக சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.இதன் தொடர்ச்சியாக சீன பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரியை விதித்துள்ளது.ஆனால் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தக மதிப்பு 4.5 சதவிகிதம் குறைந்துள்ளது. சீனாவிடம் இருந்து, இந்தியா இறக்குமதி செய்யும் வர்த்தக மதிப்பு 2.54 சதவிகிதம் குறைந்து இருப்பதாக சீனாவின் சுங்க வரித் துறை கணக்கு சொல்கிறது. இப்போதும் சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதை விட, சீனாவில் இருந்து இந்தியா அதிகமாக இறக்குமதி செய்துள்ளது தான் நிதர்சனமான உண்மை. 

திருப்பி அதிரடியாக சீனாவின் வணிக அமைச்சகம்  இந்திய கம்பெனிகள் மீது anti-dumping duty வரியை அதிகரிக்க உள்ளது.இதன் அடிப்படையில் 7.4 சதவிகிதம் முதல் 30.6 சதவிகிதம் வரை அதிகரிக்க உள்ளது . இத்தனை நாள், இந்தியா விதித்த வரிகளுக்கு எல்லாம் எதிர்வினையாற்ற தொடங்கி உள்ளது.இனி இந்தியா உஷாராக இருக்க வேண்டும்.