tamilnadu

img

பரூக் அப்துல்லா எங்கே? -  மக்களவையில் முலாயம் சிங் யாதவ் கேள்வி

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், எம்பியுமான பரூக் அப்துல்லா எப்போது வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பிரிவு 370  ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மோடி அரசு. இதனால்  காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறும் என்று அஞ்சி  2019 ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இன்று வரை முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது ஜம்முகாஷ்மீர் விவகாரம் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர்  முலாயம் சிங் யாதவ் என்னுடன் அவையில் எப்போதும் உட்காரும் பரூக் அப்துல்லா, எப்போது அவைக்கு திரும்புவார்? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் சபாநாயகர் ஓம்பிர்லா, முலாயம் சிங்கின் கேள்வியை கண்டு கொள்ளாமல் அவரின் கேள்விக்கு  அரசின் பதில் பற்றி தெரிந்து கொள்ளாமல் அடுத்துள்ள நபரை கேள்வி கேட்க அனுமதித்தார்.