india

img

உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நல உறைவால் இன்று காலமானார். 
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக முலாயம் சிங் யாதவ் கடந்த 1989-91, 1993-95, 2003-2007 வரையில் 3 முறை பதவி வகித்துள்ளார். தேவ கவுடா, ஐ.கே.குஜ்ராலின் ஒன்றிய அமைச்சரவைகளில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும், 10 முறை எம்.எல்.ஏ.வாகவும், 7 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். 
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.